இந்திய கிரிக்கெட் அணியின்பயிற்ச்சியாளர் பொறுப்பிற்கு முன்னால் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி விண்ணப்பித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக் காலம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரோடு முடிந்துவிட்டது. அன்றிலிருந்து பயிற்ச்சியாளர் இல்லாமலேயே இந்திய அணி விளையாடி வந்தது. அதற்கு பதிலாக முன்னால் வீரர் ரவி சாஸ்திரி இயக்குனராகவும் அவருக்கு துணையாக சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் உள்ளிட்டோர் உதவி பயிற்ச்சியாளராக செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் அனைவரின் பதவிக்காலமும் சமீபத்தில் நடந்து முடிந்து டி20 உலகக்கோப்பை தொடரோடு முடிந்துவிட்டதால். புதிய பயிற்ச்சியாளரை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் பெறப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்தது. இதனை அடுத்து இயக்குனராக பணியாற்றி வந்த ரவிசாஸ்திரி பயிற்ச்சியாளர் பதவிக்கு விண்ணப்த்துள்ளார். அதே போல் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீலின் பதவிக்காலம் வருகின்ற செப்டம்பர் மாதத்தோடு நிறைவு பெறுவதால், அவரும் பயிற்ச்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு முன்பு கென்யா மற்றும் ஓமன் நாட்டிற்கு பயிற்ச்சியாளராக செயல்பட்டிருக்கிறார் அவர். கடந்த 2003 ஆண்டு இவர் பயிற்ச்சியாளராக இருந்த போது கென்யா அணி உலகக்கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments