Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 16, 2016

கேரள சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை - சிக்கினான் முக்கிய குற்றவாளி


நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஷிஜா (30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த  தலித் சட்டக்கலூரி மாணவி கடந்த மாதம்  அவரது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாணவியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே அவரை பலர் கூட்டாக கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷிஜா கொலை குறித்து பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


கேரளாவில் அண்மையில் பதவி ஏற்ற  முதல்-மந்திரி பினராய் விஜயன், சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி 20 பேர் அடங்கிய போலீஸ் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழு நடத்திய தீவிர விசாரணையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 3 சந்தேக நபர்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ஆவார். மற்றொருவர் அந்த பெண்ணின் மிக நெருங்கிய உறவினராவார். 

சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து முதல் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முதல் நபர் கைது செய்யபப்ட்டதால், ஏனைய இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்தும் இதற்கு என்ன தீர்ப்பு நீங்கள் வழங்குவீர்கள் என நேரடியாக மக்களிடம் ஆன்லைன் ஊடகம் நடத்திய வாக்கெடுப்பில் "தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்" என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து மாணவர்களிடையே கருத்து கேட்டதற்கு "இந்த வழக்கில் கைது செய்து. கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் உடனே எந்த பாரபட்சமும் பார்க்காமல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்க வேண்டும்" என நூறு சதவீத மாணவர்கள் மற்றும் இளைஞ்சர்கள் மிக ஆக்ரோசமாக தெரிவித்தனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic