சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் நன்றி தெரிவிக்கிறார். இதற்காக, தொகுதியின் பல்வேறு இடங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அதன்படி, ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் சிலை - பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரியநாராயண செட்டி தெரு - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, வீரராகவன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு, அருணாசலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு - வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு, வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம் - எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ. நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை- திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் மகாராணி தியேட்டர் பகுதி ஆகிய இடங்களில், முதல்வர் ஜெயலலிதா பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments