‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்பார்கள். கோடம்பாக்க டிக்ஷ்னரியைப் பொறுத்தவரை நாய் வால் என்றால் சிம்பு என்று அர்த்தம். மூணு வருஷத்துக்கு முன்னாடி பூஜை போட்ட ‘இது நம்ம ஆளு’ படம் முக்கி முக்கி இப்போதுதான் ரிலீஸ் ஆனது. படமும் ஓரளவுக்கு ஓடி சிம்புவின் பீப்புக்கு களிம்பு தடவியது. ஆனாலும், சிம்பு திருந்துவதாக இல்லை. ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற கதையாக, மீண்டும் ஷூட்டிங்கிற்கு வராமல் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் அப்படிப் பண்ணுவது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. ஆனாலும், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் சிம்புவுக்கு உலகம் முழுக்க ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்த தன்னிடம் அப்படி எதுவும் வச்சிக்க மாட்டார் என்று நினைத்துத்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை ஆரம்பித்தார் கெளதம் மேனன். ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக சரியான நேரத்திற்கு வந்து கொண்டிருந்த சிம்பு, ஒருகட்டத்தில் அப்படி இப்படி டேக்கா கொடுக்க ஆரம்பித்தார். அதிலும், கடைசியாக நடந்ததுதான் கெளதம் மேனனை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.
அன்று க்ளைமாக்ஸ் ஷூட்டிங். அதிகாலையிலேயே சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜர், சிம்புவைத் தவிர. மதியம் வரை பார்த்த விழி பூத்தபடி எல்லாரும் காத்திருக்க… அப்படிப் பூத்த பூவையே பூமாலையாக்கி கேமராவுக்குப் போட்டு பேக்கப் சொல்லிவிட்டார் கெளதம் மேனன். அன்று பேக்கப் சொன்னவர்தான்… மறுபடியும் ஸ்டார்ட்… கேமரா… ஆக்ஷன்… சொல்லாமலேயே இருக்கிறார். க்ளைமாக்ஸ் உள்பட இன்னும் 5 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். முக்கியமாக, சித்ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வசீகரித்த ‘தள்ளிப்போகாதே…’ பாடலே இன்னும் படமாக்கப்படாமல் இருக்கிறதாம். இதற்குள் தெலுங்கில் ஆடியோ ரிலீஸையும் நடத்தி முடித்துவிட்டு, புரொமோஷன்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் கெளதம். ஆனால், தமிழில் ஒன்றுமே நடக்கவில்லை. இது லேட்டாகத்தான் சிம்புவுக்குத் தெரிய வந்திருக்கிறது. பதறியடித்து கெளதம் மேனனுக்கு போன் செய்தால், ரிங்காகி கட்டாகிறதாம். இந்தப் படம் எப்போ ரிலீஸாகுமோ?
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments