சூப்பர் ஸ்டாரை சீண்டும் தளபதி ரசிகர்கள்...!!!
சாமியே சும்மா இருந்தாலும், பூசாரிகளும் பக்தர்களும் சும்மா இருக்க மாட்டார்கள் போல. அதுவும் பிரபல நடிகர்களாக இருந்தால், அவர்களுடைய ரசிகர்களின் அலப்பறைக்கு அளவே இருக்காது போல. இப்படித்தான் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று சொல்லி ரஜினி ரசிகர்களிடம் சமீபத்தில் சிக்கி சின்னாபின்னமானார் ஜி.வி. பிரகாஷ். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் இயக்குநர் தரணி. விஜய்யை வைத்து ‘கில்லி’ என்ற சூப்பர் படத்தையும், ‘குருவி’ என்ற காவியத்தையும் எடுத்தவர் இவர். விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர், ‘பாட்ஷா ரீமேக்கில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும்’ என போகிற போக்கில் பொதுவாகச் சொல்லி வைத்தார். இதை ரசிப்பார்களா ரஜினி ரசிகர்கள்? ஏற்கெனவே கடும் கோபத்தில் இருப்பவர்கள், மறுபடியும் விஜய் மற்றும் தரணியைத் திட்டி வருகின்றனர். இத்தனைக்கும் ‘பாட்ஷா’ படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், அதை ரீமேக் செய்யலாம் என ரஜினியிடம் கேட்டிருந்தது. அதற்கு ரஜினியின் பதில், ‘வேணாம்… நல்லாருக்காது… அப்படியே விட்டுடுங்க’. அவ்ளோதான் மேட்டர். சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டாரே...!!!
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments