Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

எகிப்து விமானம் அவசரத் தரையிறக்கம் - வெடிகுண்டு மிரட்டல் காரணமாம்


எகிப்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த நாட்டு எகிப்து ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
135 பேருடன் கெய்ரோவிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட எகிப்து ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கெய்ரோ விமான நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் கூறினார்.
இதையடுத்து, அந்த விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த விமானம் உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
எனினும் அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் அந்த விமானம் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோவிலிருந்து பாரீஸ் நோக்கி கடந்த மாதம் 19-ஆம் தேதி புறப்பட்ட விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கியது. இதற்கு குண்டுவெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மற்றொரு எகிப்து ஏர் விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic