Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 24, 2016

வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ்


அரசியல் பிரச்னையால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த வடிவேலு, ‘தெனாலிராமன்’, ‘எலி’ என ஹீரோ வேஷம் கட்டினார். ஆனால், அர்ணாக்கயிறு இல்லாத டவுசர் போல் அவை ரிலீஸான உடனேயே பெட்டிக்குள் முடங்கின. இதனால் வருத்தப்பட்ட வடிவேலு, தன்னுடைய கொள்கை, ஈகோ… இன்னும் என்னவெல்லாம் இருந்ததோ, அத்தனையையும் தூக்கிப்போட்டுவிட்டு மறுபடியும் காமெடியனாக நடிக்கத் தயாரானார். இதுபோதாதா இயக்குநர்களுக்கு? குச்சி மிட்டாயைக் கண்ட குழந்தை போல அப்படியே அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு. அதில், முந்திக் கொண்டவர் ‘கத்தி சண்டை’ இயக்குநர் சுராஜ். விஷால் நடிக்கும் இந்தப் படத்தில், வடிவேலு தான் வில்லன். இன்னும் சில படங்களில் காமெடியனாக நடிக்கவும் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இதனால், தற்போது காமெடியன்கள் என கூறிக்கொண்டு திரிபவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருக்கிறதாம்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic