பெண் கேரக்டருக்காக 10 கிலோ இடை குறைந்த சிவகார்த்திகேயன்...!!!
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு நடித்துள்ள படம் ‘ரெமோ’. இந்தப் படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 24ஏம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரித்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி, இந்தப் படத்துக்கு ஒலிக்கலவை செய்கிறார். நார்மலான ஹீரோ வேடம், பெண் நர்ஸ், வயதான தாத்தா என மூன்று கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவர் 70 கிலோ எடை இருந்ததால், ஆரம்பத்தில் பெண் வேடம் சரியாகப் பொருந்தவில்லை. இதனால், எப்போதாவது ஜிம்முக்குப் போவதையும் விட்டுவிட்டு எடையைக் குறைக்க ஆரம்பித்தார். 10 கிலோ எடை குறைந்த பிறகுதான் பெண் வேடம் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது. 40 நாட்கள் அந்த கேரக்டரில் நடித்தபிறகு, சில நாட்கள் இடைவெளி எடுத்து மறுபடி பழைய எடைக்கே வந்துள்ளார். அதன்பிறகுதான் நார்மலான ஹீரோ வேடத்துக்கு ஷூட்டிங் நடந்துள்ளது. நடிக்கவந்த சில வருடங்களிலேயே சிவகார்த்திகேயன் இந்தளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பதைக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments