Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 17, 2016

தந்தை பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜர்


"தந்தை பெரியாரை" அவமதிப்பு செய்ததாக தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே மீது திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
 
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ரங்கராஜ் பாண்டே காலம் கடத்தி வந்தார். இதனால், பாண்டேவுக்கு "பிடிவாரண்ட்" பிறக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 13.6.2016 அன்று நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார்.
 
பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, “சட்டத்தை மதிக்க வேண்டும் என்று டிவியில் அறிவுரை கூறும் நீங்கள் கடந்த 6 வாய்தாக்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே" கேள்வியை வீசினார். 
 
"ஐய்யா.... எனக்கு உடல்நிலை சரியில்லை" என பாண்டே பட்டென பதில் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, "உங்களைத் தான் நான் தினமும் டிவியிலே பார்க்கிறேனே" என்றதும் தடுமாறிப்போனார் ரங்கராஜ் பாண்டே.
 
பின்பு, "அடுத்த விசாரணையின் போது உங்ளது எம்டி பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதைக் கேட்டு ஷாக்கான பாண்டே, "ஐயா.. அவரு எந்த  தவறுமே செய்யவில்லை" என்றவர், "எனக்கு வீரமணி அய்யாவையும், சுபவீ அண்ணனேயும் கூட நல்லாவே தெரியும்" என பாண்டே அடுக்க, "இது நீதிமன்றம், இங்கு கேள்வி நான் தான் கேட்க வேண்டும்" என நீதிபதி ஒரு போடுபோட பாண்டே கப்சிப்.
 
இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic