Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 6, 2016

மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முஹம்மது அலியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது


குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (வயது 74) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். பார்க்சின்சன் என்ற நரம்பு மண்டல செயலிழப்பு நோயால் 32 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த முகமது அலி சுவாச கோளாறு காரணமாக பீனிக்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.

முகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வருகிற 10-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இந்நிலையில், முகமது அலியின் உடல் இன்று அரிசோனா நகரில் இருந்து  கென்ட்டுக்கி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு தனி விமானம் மூலம் இன்று கொண்டு வரப்பட்டது. சவப்பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முகமது அலியின் உடலுக்கு உள்ளூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic