ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கதாரியா நேற்றைய தினம் ராஜஸ்தானில் கூட்டம் ஒன்றில் பேசிய போது முன்னால் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கை ஆபாசமான வார்த்தையால் விமரிசித்தார். மன்மோகன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடியோடு ஒப்பிட்டு பேசியபோது ஆபாசமாக திட்டியுள்ளார்.
கத்தாரியாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபம் அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியினர் கத்தாரியா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தான் பேசிய பேச்சு விபரீதம் ஆனதை உணர்ந்த கத்தாரியா தான் உபயோகித்த வார்த்தை வாய்தவறி வந்துவிட்டதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
No comments:
Write comments