அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடியப்போவதை அடுத்து அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும் மாகாணத்தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே குடியரசுக்கட்சி அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில் அவருக்கு சமமான அந்தஸ்தஸ்தோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னால் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டனும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார். அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு தேவையான பிரதிநிதிகளின் வாக்குகளை பெற்று விட்டதால் அவரும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்போடு போட்டிப்போடுவது உறுதியாகிவிட்டது.

No comments:
Write comments