நாட்டின் தலை நகரமான டெல்லியில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்ற அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கடந்த 2012ஆம் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வைத்து கொடூர கும்பல் ஒன்று கற்பழித்து கொலை செய்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. கற்பழிபு குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்டத்தி மாற்றம் கொண்டு வரவேண்டும் என்கிற நெடு நாள் கோரிக்கையை ஏற்று அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. இருந்த போதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் குறைந்தபாடில்லை என்பதைதான் வெளிவந்திருக்கக்கூடிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய பாலியல் குற்றத்திற்கும் டெல்லியே தலை நகரமாக திகழ்கிறது. 2015ஆம் ஆண்டை பொறுத்தவரை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டுல் கற்பழிப்பு சம்பவங்கள் 1.52% அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மொத்தம் 2166 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது எனவும் இது 2015 ஆம் ஆண்டில் 2199 ஆக உயர்ந்துள்ளதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்கை வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்கின்றன எனவும், டெல்லியில் மட்டும் மூன்று மடங்காக இக்குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடம் மட்டும் கடந்த மே மாதம் 15ஆம் தேதி வரை 781 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது 7.5% அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏதோ தலைநகரத்தில் மட்டுமே நடக்கக்கூடிய குற்றச்செயலாக கருதுவிடமுடியாது. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கை படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறோம் என்கிற ரீதியில் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கிறதே தவிர அதை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வந்ததிலிருந்து எத்துனை கற்பழிப்பு குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது, அதில் எத்துனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கெடுத்துப்பார்த்தால், சட்டத்திருத்தம் வெறும் ஏட்டளவிலேயே இருக்கின்றது என்பது தெரிய வரும்.
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் கொண்டு வந்த சட்ட திருத்ததை அமுல்படுத்தினாலே சாத்தியம் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

No comments:
Write comments