ஒபாமாவின் பிளாக்பெர்ரி போனில் புதிய மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தனது மனைவி உள்ளிட்ட 10 பேருடன் மட்டுமே பேச முடியும்.
ஒபாமா, அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் இருந்து பிளாக்பெர்ரி போனை பயன்படுத்தி வருகிறார். ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளம் கொண்ட மொபைல்போன்கள் வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு மாறத்துவங்கினர்.
இந்நிலையில், ஒபாமாவின் பிளாக்பெர்ரி போனில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. பாட்டு கேட்க முடியாது. போட்டோ எடுக்க முடியாது. இந்த போன் மூலம் அவரது மனைவி மிச்செல், துணை அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட 10 பேரிடம் மட்டும் பேச முடியும். ஒபாமா மற்றவர்களிடம் பேசுவதற்கு புதிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த தகவலை ஒபாமா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். மேலும் தனது போனை விளையாட்டு பொருள் போன்று பாவித்து வருவதாக கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments