அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் உத்தேசமான வேட்பாளரான ஹில்லரி கிளிண்டனை, அதிபர் ஒபாமா தனக்கு அடுத்தபடியாக அதிபர் பதவிக்கு வருவதற்கு தான் விரும்பும் வேட்பாளராக அங்கீகரித்துள்ளார்.
ஒபாமா விடுத்த ஒரு வீடியோ செய்தியில், தன்னால் ஹில்லரியொடு பிரச்சாரம் நடத்த காத்திருக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
ஹில்லரி மேலும் மாசசூசெட்சை சேர்ந்த பிரபல தாராளவாத செனட்டர் எலிசபெத் வாரனின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
ஆனால் கிளிண்டன் தனது ஜனநாயக கட்சியின் போட்டி வேட்பாளர் பெர்னி சாண்டர்சின் ஆதரவை இன்னும் பெறவில்லை.
ஆனால் பெர்னி சாண்டர்ஸ் தான் அடுத்த வாரம் வாஷிங்டன் டி.சியில் நடக்கவுள்ள இறுதி பிரைமரி தேர்தலில் பங்கேற்கவுள்ளதாகவும், கிளிண்டனை எதிர்காலத்தில் சந்திக்கவுள்ளதாகவும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் நவம்பர் மாதம் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரோடு பணிபுரியவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாண்டர்ஸ் பேசுகையில் டிரம்ப் அதிபரானால் அது பேரழிவாக இருக்கும் என்றும் அவரது பிரச்சாரம் மாற்றுக் கருத்து கொண்டவர்களை சகிக்காத மற்றும் பாரபட்சத்தை மையமாக கொண்டது என்றும் குற்றஞ்சாட்டினார்.
செய்தி :: சாஹிப்...



No comments:
Write comments