அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டெனால்ட் டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருவதால், அவரின் இந்த பேச்சுக்கு இந்து சேனா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அந்த அமைப்பினர் டெனால்ட் டிரம்பை மனிதகுலத்தின் பாதுகாவலராகவும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான மேசியாவாகவும் தாங்கள் கருதுவதாக தெரிவித்தனர். இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, " நாங்கள் டொனால்ட் டிரம்பின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம், காரணம் அவரை நாங்கள் எங்களது கதாநாயகனாக பார்கிறோம். இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார், நாங்கள் அவரை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கூறினார்.
இனி வரும் காலங்களில் அமெரிக்க தூதரகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் முன்பு டொனால்ட் டிரம்பை ஆதரித்து பேரணி மற்றும் பல்வேரு நிகழ்ச்சிகளை தங்கள் அமைப்பு சார்பாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே நீங்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, எந்த அரசியல் கட்சித்தலைவர்களும் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பேசுவதற்கும் தைரியம் பெற்றிருக்கவில்லை, காரணம் அவர்கள் அனைவருக்கு டிரம்ப் மீது பயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு எப்பொழுதும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதுவும் மற்ற கட்சிகளைப்போல மதசார்பற்ற கட்சியாக செயல்படும், இதுவே பா.ஜ.கவின் நிலையாக இருக்கிறது. பா.ஜ.கவை இனி நம்புவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்பின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு போஸ்டர்களை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பி மக்களை இவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதே அமைப்பு கடந்த மே மாதம் டிரம்ப் அதிபர் தேர்தல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments