மேற்குவங்கத்தில் இயங்கும் பள்ளி ஒன்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவுமாறு எழுதிய கடிதத்தை அடுத்து, அந்த பள்ளிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 76 லட்சம் நிதி ஒதுக்கினார்.
மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணமோயி சாஸ்தா ஷிக்சா நிகேதன் என்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவிடுமாறு மாநிலங்களவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற வீரருமான சச்சின் டெண்டுல்கருக்குக் கடிதம் எழுதினர்.
இதயடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.76 லட்சம். அவரது இந்த நிதி கடந்த நிதியாண்டில் அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மாணவிகளுக்கு சிறப்பு அறை உள்ளிட்ட புதிய கட்டடங்கள் அந்த பள்ளியில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தங்கள் கடிதத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த சச்சினுக்கு அந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments