Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 5, 2016

போனால் போகட்டும் போடா...




"போனால் போகட்டும் போடா... இந்த கூட்டணியில் நிலையாய் இருந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா...."

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனும் எங்களது கூட்டணியில் இருந்து பிரிந்து போக நினைத்தால் போகட்டும். அவர்களை வேறு யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கினைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழுவின் கூட்டன் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ "கட்சி என்றால் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள் இதுவெல்லாம் சகஜம்தான், இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது.  திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றமாக துவங்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. தேமுதிகவும், தாமாகவும் அதற்கு பின்னர் தான் நம் கூட்டணியில் வந்து இணைந்தார்கள். அவர்கள் இருவரும் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்களின் எண்ணம் அவ்வாறாக இல்லை. அவர்கள் வேன்டுமானால் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ளட்டம். அவர்களை வேறு யாரும் தங்களோடு சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்" என வைகோ கூறினார்.

தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததை அடுத்து அக்கூட்டணியிலிருந்து உடனே வெளியேறிவிடவேண்டும் என தேமுதிகவின் மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலும் கூறிவருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வெகுவிரைவில் நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்று தெரிகிறது. இதே போல் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான வாய்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, வைகோ இவ்வாறு பேசியிருப்பது கூட்டணியிடையே நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
- See more at: http://www.newindia.tv/news/tamilnadu/item/422-mnk-damaged-because-of-vaiko#sthash.1Jgkqu0m.dpuf

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic