Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 13, 2016

காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் - மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்...!!!


தமிழ்நாடு காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காவலர் செந்தில்குமார் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உரிமைகளை பெற கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை காவலர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது.

போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை டி.ஜி.பி. பரிசீலித்து, ஒரு மாதத்தில் முடிவெடுக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. ஆனால், டி.ஜி.பி. இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக எங்களின் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.சுப்பையா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதில் அளித்த தமிழக அரசு, 'காவலர்களின் குறைகள் அவ்வப்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே, காவலர்களுக்கு என சங்கம் தேவையில்லை' என்று கூறியிருந்தது.

இதை தொடர்ந்து, தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி, தமிழ்நாடு காவல்துறை சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என்று கூறியதுடன் அந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic