ஜனநாயகம் குறித்து பிரதமருக்கு மோடிக்கு விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிஉள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை ரத்து செய்ய கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதால் ஜனாதிபதி ஆட்சி விவகாரத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிப்பெற்று உள்ளது.
அருணாச்சல பிரதேசதம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது செல்லாது, நபம் துகியின் அமைச்சரவையை கலைத்தது செல்லாது, கவர்னரின் உத்தரவு எதுவும் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கைக்கும் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. காங்கிரசிடம் ஆட்சியை சுப்ரீம் கோர்ட்டு திருப்பிக் கொடுத்தது. ஜனாதிபதி ஆட்சி விவகாரத்தில் பா.ஜனதா மீண்டும் பின்னடவை சந்தித்து உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கள்:-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “ஜனநாயகம் குறித்த பிரதமருக்கும் விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி.” என்று கூறிஉள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,
மோடிஜிக்கு அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை, மக்களின் தீர்ப்பின் மீதும் நம்பிக்கை இல்லை. சர்வாதிகார அணுகுமுறையிலே இந்த நாட்டை வழிநடத்த பிரதமர் மோடி விரும்புகிறார். உத்தரகாண்டை அடுத்து அருணாச்சல பிரதேசம். பிரதமர் மோடி இதன்முலம் பாடம் கற்றுக் கொள்வார் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு மதிப்பளிப்பார் என்றும் நம்புகின்றேன். அவர் டெல்லி அரசை செயல்படவிடுவார் என்றும் நம்புகின்றேன் என்று கூறிஉள்ளார்.
அருணாச்சல பிரதேசம் காங்கிரஸ் தலைவர் நினோங் எரிங்,
”சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம். எங்களுடைய ஆட்சி திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடன் வேறுபாடு உள்ள தோழர்களும், தவறாக வழிநடத்தப்பட்ட தோழர்களும் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) மீண்டும் திரும்பவேண்டும். மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும்,” என்று கூறிஉள்ளார்.
முன்னாள் அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி நபம் துகி,
சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு நீதி கிடைத்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இன்று நாட்டையும், அதனுடைய அரசியலமைப்பையும் காப்பாற்றிஉள்ளது. ஒரு வரலாற்று மற்றும் குறிப்பிடத்தக்க தீர்ப்பானது நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. நாங்கள் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துவோம், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம். சட்டப்பூர்வமாக தேவையான நடவடிக்கையை முன்னெடுப்போம், என்று கூறிஉள்ளார்.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் வெளியிட்டு உள்ள ’டுவிட்’ செய்தியில்,
அருணாச்சல பிரதேசத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு, ஆட்சியை திருப்பிக் கொடுத்த மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட்டிற்கு தலைவணங்குகிறோம், கவர்னர் ராஜினாமா செய்யவேண்டும், என்று கூறிஉள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments