1500 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடி பஸ் சீனாவின் சாலைகளில் விரைவில் வர இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் உலக சூழலில் இன்று சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டங்களை எல்லா நாடுகளும் எடுத்து வருகிறது. வாகன போக்குவரத்து ஆரம்ப கால கட்டம் முதல் இன்று வரை சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் அமைக்கப்படுகிறது. ஆனால் பாலங்கள் அமைத்தாலும் பலன் கிடைக்காத போது மெட்ரோ ரயில், மோனோ ரயில் என திட்டங்கள் வரத்தொடங்கின.
இதன் வரிசையில் தற்போது பல ஆண்டுகளாக சீனாவில் சாலைகளில் அதிக பயணிகளை கொண்டு செல்லும் பஸ் திட்டத்துக்கான் ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இதன் முயற்சியாக தற்போது 1500 பயணிகள் வரை பயணிக்கும் மாடி பஸ் சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
எத்தனை திட்டங்கள் வந்தாலும் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க தனி நபர் வாகனங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கூற்றாக உள்ளது. அதற்கு பொது போக்குவரத்து சேவைகளை அரசு விரிவுபடுத்தினால் மட்டுமே சாத்தியம் என்பது அவர்களின் பதிலாக உள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments