Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 1, 2016

திருச்சி தோட்டா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி?

திருச்சியில் உள்ள துறையூர் தனியார் தோட்டா தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
 
துறையூர் அருகே முருங்கப்பட்டியில் தனியார் தோட்டா வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் கூறிவந்த நிலையில், இன்று காலை தொழிற்சாலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த வெடி விபத்து காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த பகுதி பயங்கர புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த வெடி விபத்தின் போது அங்கு 30-க்கும் அதிகமானோர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இதில் தொழிற்சாலையின் உள்ளே பணியில் இருந்த 20 பேர் பலியாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அவர்களில் 4 பேர் உயிர் தப்பினர் உள்ளனர். சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic