Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 1, 2016

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தலைவர் கருணாநிதி இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக தட்டம்மையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவில் இருந்து அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் பொன்முடி ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுகவின் வி.பி.துரைசாமி, திமுக தலைவர் கருணாநிதி ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். சாதாரண அறையில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர் மேலும் சில நாட்கள் தங்கியிருப்பார் எனவும், மருத்துவமனையில் நலமாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic