Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 24, 2016

5 மாதத்தில் ஆயிரத்திற்குமேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை!


உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த் நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அம்மாநில அரசு பதிலளித்துள்ளது. அதில் உத்திரபிரதேச‌ மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வரை 1012 பாலியல் பலாத்கார வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4520 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலத்தில் 1386 திருட்டு வழக்குகளும், 86 வழிப்பறி தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் நடக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. நிலத்தில் நடைபெறும் குற்றங்களை கட்டுபாடுத்தும் நோக்கில் குற்றவியல் பிரிவு சிறப்பு போலீசாரை ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic