இந்தியாவில் தலித் சமூகம் தாழ்த்தப்பட்ட சமூகமாகவே இருந்துவருகிறது. இந்து சமுதாயத்தில் பெரிய சமுதாயமாக கருதப்படுவது தலித் சமூகமே, இருந்த போதிலும் தமிழகத்தில் இன்னும் நிறைய கோயில்களில் தலித் சமூக மக்கள் வழிபடுவது என்பது அவர்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது.
பலவருடங்களுக்கு முன்பாக தெற்கு தமிழக மாநகரமான மதுரையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் மகாத்மா காந்தி. தீண்டாமை ஒழிப்பு கொள்கைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ள தேசத்தந்தைக்கே ஒரு சமயம் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கதர் ஆடை உடுத்தியிருந்த காரணத்திற்காக மதுரையின் புகழ்பெற்ற கோயிலான மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டுகளில் தலித்கள் கோயிலுக்குள் நுழைவதற்கான தடை ரத்து செய்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னர் காந்தியால் கோயிலுக்குள் நுழைய முடிந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இன்னமும் தலித்கள் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக தலித் சமூக மக்களின் எழுச்சி தமிழகத்தில் பெருமளவில் உருவாகியிருக்கிறது. தங்களது உரிமைகளுக்காக அவர்கள் போராடத்துவங்கிவிட்டனர். அரசியல் சக்தியை கைபற்ற தங்கள் சமூக மக்கள் மீண்டெழுந்துவிட்டார்கள் என்றே அச்சமூகத்தின் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச்சேர்ந்த பழங்கள்ளிமேடு கிராம மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் நடத்த அனுமதிக்கப்படாததால் தாங்கள் அனைவரும் மதம் மாறப்போவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை விட உயர்ந்த ஜாதியாக கூறப்படும் பிள்ளைமார்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்.
தலித்களை பொறுத்தவரை தங்களது சம்பிரதாய வழிபாடுகளை கோயிலுல் நடத்துவது என்பது தங்களது உரிமை என்றும், தங்களுக்கு கோயிலுக்குள் சம உரிமை வழங்கப்படவேண்டுமென போராட்டங்களை நடத்தினர்.

அவர்களைப்போல் (பிள்ளைமார்கள்) நாங்களும் இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள்தான். அவர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம். எங்களது உரிமைகள் அனைத்து மறுக்கப்பட்டால் மதம் மாறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களுடைய போராட்டம் எல்லாமே எங்களுடைய உரிமைகளுக்கானது, எங்களுடைய போராட்டங்கள் இது பொன்று பிரச்சனைகளை சந்திக்கும் பல்வேறு கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சுமூக பேச்சுவார்த்தை குழுவும் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் அதன் மூலம் எந்த பலனும் ஏற்படவில்லை. இதன்காரணமாக கோயில் திருவிழாவை நடத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டார்கள்" என பழங்கள்ளிமேடு கிராமத்தைச்சேர்ந்த தமிழ்ச்செல்வம் தெரிவித்தார்.
பழங்கள்ளிமேடு கிராமத்தை போலவே தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இது போன்ற பிரச்சனைகளை தலித் சமூக மக்கள் சந்தித்து வருகின்றனர். கடலூர், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமபுரங்களில் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் லிங்கத்துப்பாறை கிராமத்தைச்சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் கூறும்போது "எங்களுடைய கிராமத்தில் இருக்கும் இந்த கோயிலை ஆண்டாண்டுகாலமாக நாங்களே நிர்வகித்து வருகிறோம். சமீபத்தில் வேறு ஜாதியைச்சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகத்தை எங்களிடமிருந்து பரிக்க முயற்ச்சி எடுத்தனர். அவ்வாறு செய்தால் நாங்கள் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என்றும் அனைவரும் வேறு மதத்திற்கு மாறிவிடுவோம் என்று சொன்ன பிறகே எங்களால் எங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடிந்தது" என தெரிவித்தார்.
மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் தலித்கள் கோயிலில் சில சம்பிரதாய வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத பிரச்சனையாக இருந்தாலும், இங்கே அவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. உதாரணத்திற்கு கடந்த 2008 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் கோயிலுக்குள் தலித்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 52ற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
தீண்டாமை ஓழிப்பு முன்னனியின் தலைவர் திரு சம்பத் கூறும்போது "தலித் சமூக மக்களிடையே இன்றைய காலத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தங்களது உரிமைகள் என்ன என்பதும் அதற்காக எவ்வாறு போராட வேண்டுமென்பதையும் நன்கு அறிந்துகொள்ள துவங்கிவிட்டனர். பாகுபாடு பார்க்கப்படுவதை ஒரு போதும் சகித்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களே இதற்கு நல்ல உதாரணம்" என தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் கூறும்போது " தமிழகம் முழுவதும் தலித் சமூக மக்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஓர் அணியில் திரள வேண்டும்" என தெரிவித்தார்.
தீண்டாமைக்கொள்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக காணப்பட்ட விஷயமாகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பாகவே இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வைத்தியநாத ஐயர் தீண்டாமைக்கு எதிராக தடாலடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலித் சமூகம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி 4 தலித் சமூகத்தினரை 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச்சென்றார். இதற்காக அவர் பெரும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
வைத்தியநாத ஐயரின் பிரச்சாரத்திற்கு 15 வருடங்களுக்கு முன்பாக 1920களில் ஈ.வே.ரா பெரியாரின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments