Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

பசுகாவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உள்துறை அமைச்சகம்


மாட்டிறைச்சி விவகாராம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஆணை பிரப்பித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பாக பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தலித் சமூகத்தினர் கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்களில் 80% பேர் சமூக விரோதிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

தற்போது உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளது. அதில் பசு காவலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவேண்டும். எக்காரணத்திற்காகவும், யாரும் சட்டத்தை தன் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பல மாநிலங்களில் பசுவதை தடைச்சட்டம் அமலில் இருக்கும்போது மாட்டை கொல்வதும், அதன் இறைச்சியை உண்ணுவதும் சட்டவிரோதமாகும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிற யாரும் சட்டத்தை தன் கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்திருக்கிறது.

அதே போன்று பசு என்பது  இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய விலங்காகும். அதனை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். பசுவை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுவை பாதுகாக்க வேண்டும் என்பதும் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற அனைத்து மக்களும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic