Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

ஈஷா யோகா மையம் - நீதிமன்ற வாசலை தட்டிய பெற்றோர்கள்

ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்களையும் அடைத்துவைத்து கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக மாற்றிவிட்டனர் என அவர்களின் தாயார் சத்யவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கோவை அருகே வெள்ளியங்கிரி பகுதியில் ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையம் மற்றும் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு ஆரம்பத்தில் யோகா பயில்வதற்காக சென்ற தனது இருமகள்கள் லதா மற்றும் கீதாவை கட்டாயபப்டுத்தி மொட்டை அடித்து சன்னியாசிகளாக மாற்றிவிட்டனர் என அப்பெண்களின் பெற்றோர்கள் காமராஜ்-சத்தியவதி காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு புகார் அளித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பாக இதற்கு முன் எத்துனையோ புகார்கள் வந்திருக்கிறது. காவல்துறையினர் விசாரித்தபோது அங்கு யாரும் கட்டாயபப்டுத்தி தங்க வைக்கப்படுவதில்லை எனவும், தாங்களாகவே விருப்பப்பட்டு சன்னியாசம் பூண்டதாக தெரிவித்து வருவதால் காவல்துறையினரால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இது போலவே காமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த கோவை போலீஸாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் இதே புகாரை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் காமராஜ்-சத்தியவதி தம்பதியின் மனு அளித்தனர். இதில் தங்களது இரு மகள்களையும் கட்டாயப்படுத்தி மொட்டை அடித்து சன்னியாசிகளாக மாற்றிவிட்டனர் என்றும், இது தவிற நிறைய ஆண்கள், பெண்கள் இந்த மையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் புகார் பற்றி நீதிபதிகள் கேட்டபோது, கோவை காவல்துறையிடமிருந்து ஈஷா பற்றி தவறான எந்த தகவலும் அரசுக்கு வரவில்லை என கூறினார். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், லதா, கீதா ஆகியோர் தாங்களே விருப்பப்பட்டு கூட சன்னியாசிகளாக மாறியிருக்கலாம். ஒருவேளை அப்படி விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இரு பெண்களும் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதை உறுதி செய்துகொள்ள, கோவை மாவட்ட நீதிபதி, அந்த இரு பெண்களிடமும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.


இன்று, மதியம் 3 மணியளவில், கீதா, லதா ஆகிய இரு பெண்களிடமும், கோவை மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தி, அவர்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். இரு பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, நாளை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எத்துனையோ பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார்கள் கொடுத்தும், தாங்களாகவே விரும்பி சன்னியாசம் மேற்கொண்டதாக கூறும்போது சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இதுவரை இல்லை. அதே சமையம் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் பல விபரங்களும் மர்மமாகவே இருக்கிறது. அங்கே பாதிக்கப்பட்டவர்கள் யாராவது தானாகவே முன்வந்து புகார் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic