என்னதான் அடித்துக்கொண்டாலும் இதற்கு முன்னர் ஒன்றாய் இருந்தவர்கள்தானே! பாசம் உள்ளத்தின் ஓரத்தில் இல்லாமலா போய்விடும்...? ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் இந்தியாவை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த ஒரவரு பதிலடி கொடுத்திருக்கிறார்.
”ஒலிம்பிகில் இரண்டே பதக்கங்களை வென்றவர்களை இந்தியர்கள் கொண்டாடுவது அவமானமாக இல்லையா?” என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் என்பவர் டுவிட்டரில் கேட்டிருந்தார்.
இதை பார்த்து கொந்தளித்த இந்தியர்கள் அந்த பத்திரிக்கையாளரை திட்டித் தீர்த்தார்கள். ஆனாலும் அந்த பத்திரிக்கையாளர் மீண்டும் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார். அதில், “இந்தியாவால் சச்சினை போன்ற சிறந்த வீரரை உருவாக்க முடியும் என்றால் தங்கம் வெல்லும் வீரரையும் உருவாக்க முடியும். அதற்கு முதலீடும், கவனமும் தேவை” என்று அறிவுரை கூறினார்.
இதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக, மற்றொரு பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் மசாத் அர்ஷாத் என்பவர், ஒரு பதிவை போட்டார். அதில், “தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளால் சச்சினை போன்ற ஒரு வீரரை உருவாக்க முடியுமா?” என்றார்.

No comments:
Write comments