Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

ஓடாத வண்டிக்கு எதுக்குடா தட்கல் டிக்கட்டு...?


தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50%  மேலானவை இயங்குவதற்கு தரமற்றதாக இருக்கும் நிலையில், நெடுந்தூரப் பேருந்துகளில் பயணம் செய்ய தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அத்துறையின் அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 2016-17ம் ஆண்டு போக்குவரத்து துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது திருச்சி, மதுரை,  சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நெடுந்தூரப் பேருந்துகளுக்கு செல்லிடப்பேசி தனி செயலி மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இந்நிலையில், போக்குவரத்துக்கழக தொழலாளர்கள் சிலர் கூறுகையில், “தமிழகத்தில் அரசு பேருந்துகளில் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சில பேருந்துகளை இயக்கவே முடியாது என்று நிர்வாகத்துக்கு தெரிவித்தாலும், கட்டாயப்படுத்தி இயக்கச்செல்கின்றனர். இந்நிலையில், தக்கல் முறையில் முன்பதிவு செய்தால், அதிக கட்டணம் வசூலிக்க நேரலாம்.ஆனால், பேருந்துகள் அந்த அளவுக்கு தரம் உள்ளதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே!”என்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic