Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 26, 2016

தாத்ரி வழக்கு - கொல்லப்பட்ட அக்லாக்கின் சகோதரரை கைது செய்ய கோர்ட் உத்தரவு!




மாட்டிறைச்சி விவகாரத்தில் கடந்த வருடம் கொல்லப்பட்ட முகமது அக்லாகின் சகோதரர் ஜான் முகமதை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் உத்திரபிரதேசம் தாத்ரியில் முகமது அக்லாக் என்ற 55வயது முதியவர்  தனது வீட்டின் ஃபிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனக்கூறி அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பலரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளின் குடும்பத்தார்கள் தரப்பிலும் முகமது அக்லாக்கின் குடும்பத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

மாட்டைக்கொன்று இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்கள் என வழக்கு பதிவு செய்யப்படது. சமீபத்தில் அவர்கள் அனைவரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முகமது அக்லாக்கின் சகோதரர் ஜான் முகமது தவிர மற்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டு ஜான் முகமதுவை மட்டும் கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் பசுவதை தடுப்புச்சட்டம் அமலில் இருக்கும்போது மாட்டை அறுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது.

முகமது அக்லாக்கின் வீட்டு ஃபிரிட்ஜில் மாட்டிறைச்சி தான் ஆட்டிறைச்சி என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அது மாட்டிறைச்சி என்றும் அதுவும் கன்றுவின் இறைச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முகமது அக்லாக்கின் பக்கத்து வீட்டு காரர்கள் தாங்கள் முகமது அக்லாகின் சகோதரர் ஜான் முகமது கன்றுவை கத்தியை கொண்டு அறுத்ததை தாங்கள் பார்த்தாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை முகமது அக்லாக்கின் குடும்பத்தினர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். தாங்கள் எந்த மாட்டையும் அறுக்கவில்லை என்றும், தங்களது வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி அல்ல என்று கூறுகின்றனர். தங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

தாத்ரியின் கிராமத்தில் கூடிய மகாபஞ்சாயத்தில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திற்காக முகமது அக்லாக்கின் குடும்பத்தார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், முகமது அக்லாக் கொல்லப்பட்டது நியாயமானதுதான் எனவும் தெரிவித்துள்ளனர்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic