டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) கருத்தரங் கில் பேசிய அன்புமணிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் வெளியானதன் 25-வது ஆண்டு தினம் மற்றும் இதன் தலைவரான பி.பி.மண்டல் பிறந்த நாள் விழா ஜேஎன்யு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத்யாதவ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன், ஜேஎன்யு பேராசிரியர் ஹரிஷ் வாங்டே ஆகியோருடன் பாமக எம்.பி. அன்புமணி பங்கேற்றார்.
இந்நிலையில் அரங்கின் முன்பாக, பிர்ஸா அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கம் (பாப்ஸா) தலைமையில் இடதுசாரி ஆதரவு மற்றும் தலித் அமைப்புகளின் மாணவர்கள் கூடினர். இவர்கள் அன்புமணிக்கு எதிராக முழக்கமிட்டதுடன் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இதனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இது குறித்து பாப்ஸா மத்தியக்குழு உறுப்பினரும் போராட்டத்துக்கு தலைமை ஏற்றவருமான சின்மயா மஹானந்த், ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தில் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர்கள் இளவரசன், சங்கர் ஆகியோர் கொல்லப்பட்டதில் பாமகவினர் மீது புகார் உள்ளது. பாமகவும் அதன் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் சமூகநீதியை மதிப்பது கிடையாது. எனவே அன்புமணிக்கு இந்த மேடையில் அமரத் தகுதியில்லை என்பதால் போராட்டம் நடத்தினோம். இனி அன்புமணி இங்கு எப்போது வந்தாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்றார்.
கருத்தரங்கில் அன்புமணிக்கு முன் பேசிய பேராசிரியர் ஹரீஷ் வாங்டே, தமிழகத்தில் காதல் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட தலித் மாணவர்கள் மற்றும் தர்மபுரி குடிசைகள் எரிப்பு சம்பவம் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அன்புமணி, பாமக சமூகநீதியை மதித்து நடக்கும் கட்சி என்றும், தாம் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி ஒதுக்கீட்டை அமல்படுத்தியதாகவும் தெரிவித்தார். அங்கு போராட்டம் நடத்திய மாணவர்களை மறைமுக மாகக் குறிப்பிட்ட அன்புமணி, தலித்து களுக்காக தாமும் தமது கட்சியும் செய்த சேவைகள் குறித்து இவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார்.
பி.எஸ்.கிருஷ்ணன் பேசுகையில், ஓபிசி ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தும் வகையில் எந்த சட்டமும் இல்லை என சுட்டிக் காட்டினார்.

No comments:
Write comments