Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

மத்திய அரசை நிர்பந்திக்க தமிழக அரசை வலியுறுத்தும் சி.பி.ஐ.எம் கட்சி


காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக்கோரி சி.பி.ஐ.எம் செயலாளர் ராமகிருஷணன்பிரதமரை சந்தித்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர கோரியும், காவேரி மேலான்மை வாரியம், காவேரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.  வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு சி.பி.ஐ.எம் கட்சி ஆதரவு அளிப்பதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளில் மத்திய அரசு உரிய முறையில் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டையம் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில்  தமிழ்நாடு  அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திடவும், நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கிட பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic