சகயன் டி ஓரோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் மெளடி என்ற பெயரில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு ஐ.எஸ் அமைப்பினருடன் கைகோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மெளடி என்ற அந்த பயங்கரவாத அமைப்பினர் நேற்றைய தினம் தங்களுடைய சகாக்களை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக தெற்கு பிலிப்பைன்ஸில் அமைந்திருக்கும் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு சிறைச்சலையை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் மூலம் 8 தீவிரவாதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பியதோடு ஏனைய 15 குற்றவாளிகளும் சிறையிலிருந்து தப்பியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்நாட்டு இராணுவ வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளையும் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த மெளடி என்ற பயங்கரவாத அமைப்பு சமீபத்தில்தான் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்ததாக கூறப்படுகிறது.

No comments:
Write comments