Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த புர்கான் வானியின் தந்தை!



கடந்த மாதம் கஷ்மீரில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானியின் தந்தை பெங்களூரில் வாழும் கலை அமைப்பின் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பை அடுத்து புர்கான் வானியின் தந்தை முஜாபர் வானி கூறியதாவது, "தனிபட்ட முறையில் கடந்த வாரம் பெங்களூர் சென்ற‌ நான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தேன். அவர் அமைதிக்கான தூதுவர். கஷ்மீரில் நடந்து வரும் பிரச்சனைகளை குறித்து முழுமையாக அவரிடம் தெரிவித்தேன். கஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்கு அவரது தலையீடு வேண்டும் என கேட்டுக்கொண்டேன். கஷ்மீர் மக்களுக்கு என்ன வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னிடம் கேட்டார். அதற்கு நீங்களே கஷ்மீருக்கு விஜயம் செய்து மக்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன்" என கூறினார்.

கஷ்மீரில் ஆசிரியராக பணியாற்றி வரும் முஜாபர் வானி "பிரிவினைவாதிகளை அழைத்து நிபந்தனையின்றி பேச்சுவார்த்தையில் மத்திய மற்றும் மாநில   அரசுகள் ஈடுபடவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கஷ்மீர் அமைதி நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புண்டு என தெரிவித்தார்.

கஷ்மீர் மக்கள் ஹூரியத் கவுன்சிலையே தங்களது தலைமை கவுன்சிலாக மதித்து வருகின்றனர். நிபந்தனைகளை கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்த முடியாது என முஜாபர் வானி தெரிவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடனான சந்திப்பு இரண்டு நாட்களுக்கு நடந்திருக்கிறது. இதனை ரவிசங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தாலும், என்னவெல்லாம் பேசப்பட்டது என்பதை விரிவாக அவர் தெரிவிக்கவில்லை. அதே சமயம் எதற்காக பெங்களூர் சென்றீர்கள் என கேட்டதற்கு தனக்கு நீரழிவு நோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக பெங்களூரில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்தில் தங்கியிருந்ததாகவும் முஜாபர் வானி கூறினார்.

முஜாபர் வானியின் மற்றொரு மகனான காலித் வானியும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic