திமுக-வினர் கேள்விகேட்கும்போது அவர்களுக்கு அதிமுக-வின் மாஃபா கே.பாண்டியராஜன் பதிலளிப்பார். ‘எல்லாவற்றுக்கும் நீங்கள் பதில் சொல்கிறீர்களே… நீங்கள் என்ன அமைச்சரா?’ என எதிர்க்கேள்வி கேட்டனர் திமுக-வினர். அவர்களின் எதிர்க்கேள்வியே தற்போது நிஜமாகியுள்ளது. நேற்று, தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பெஞ்சமின் வசம் இருந்த இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை, ஆவடியில் வென்று எம்.எல்.ஏ-வான மாஃபா கே.பாண்டியராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு மீது ஈடுபாடானவர். இளைய சமூகத்திடம் நல்ல நெருக்கம் உண்டு. குறிப்பாக, ஐ.டி. தொழில் சார்ந்த இளைஞர்களிடம் அவர்கள் துறை சார்ந்த விஷயங்களை நன்கு அறிந்தவர் போன்ற காரணங்களால் இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் இருந்து வெளியாகிறது. மேலும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் கவனித்து வந்த பால்வளத்துறை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த, ஊரக தொழில்துறை, அமைச்சர் பெஞ்சமினுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. புதிய அமைச்சரின் பதவியேற்பு விழா நாளை மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக சசிகலா புஷ்பாவுடனான நட்புதான் சண்முகநாதனின் அமைச்சர் பதவி பறி போனதற்கான காரணம் என்கின்றனர் அதிமுக-வினர். இதுகுறித்து ஆகஸ்ட் 18ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதில் ‘சசிகலா புஷ்பாவின் செல்போனில் இருந்த மெசேஜ்கள், வாட்ஸ் அப்பில் இருந்த மெசேஜ்கள் என ஒன்றுவிடாமல் கார்டன் வட்டாரம் கையில் எடுத்துள்ளது. அப்படி எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் தற்போது அதிரடியும் தொடங்கியிருக்கிறது. சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, அவரோடு அதிகளவில் தொடர்பில் இருந்தவர்கள் பால்வளத்துறை அமைச்சரான சண்முகநாதன் மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் நாராயண பெருமாள். இவர்கள் இருவரும் சசிகலா புஷ்பாவுடன் அதிகளவில் பேசியிருப்பதும், மெசேஜ் பரிமாற்றங்கள் செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அந்தத் தகவல்களை மட்டும் வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சண்முகநாதன், நாராயண பெருமாள் இருவரது நடவடிக்கைகளையும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாகக் கண்காணிக்க, கார்டனில் இருந்து உளவுத்துறை போலீஸுக்கு உத்தரவு போயிருக்கிறது. இருவரும், டெல்லியில் இருக்கும் புஷ்பாவுடன் வேறு நம்பர்களில் இருந்து போனில் பேசியதையும் கண்டுபிடித்திருக்கிறது உளவுத்துறை.
இதில், சண்முகநாதனுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இருந்த நட்பு பற்றி சில வருடங்களுக்கு முன்பே சர்ச்சை கிளம்பியது. தற்போது, சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த பெண்கள் இருவர், அவருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அவர்களை புஷ்பா வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டது சண்முகநாதன்தான் என்றும் அவர்கள் புகாரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படியான ஆதாரங்கள் அத்தனையும் சண்முகநாதனுக்கு எதிராகவே இருந்தது. தற்போது, சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் அமைச்சரவையில் எதுவும் மாற்றம் செய்தால், அது எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டதுபோல ஆகிவிடும் என்பதால்தான் சண்முகநாதனின் கட்சிப் பொறுப்பை மட்டும் பிடுங்கியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு அமைச்சரவையிலும் ஜெயலலிதா கை வைப்பார். அப்போது ஆட்டம் காணப்போகும் அமைச்சர்கள் பட்டியலில் சண்முகநாதனுக்கே முதலிடம் என்று சொல்கிறார்கள்’ என்று விரிவாக எழுதியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் ஆஜரானது, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பேட்டி போன்றவை முதல்வரை கோபத்தில் ஆழ்த்தியது. அதேபோல சட்டமன்றம் கூட்டத்தொடர் முடியும் தருவாயில் உள்ளதால் இந்த அமைச்சர் பதவி பறிப்பு அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

No comments:
Write comments