Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 30, 2016

ஃபோட்டோகிராஃபர்களின் கனவுப் பரிசு!

 

அமெச்சூர் புகைப்படக்காரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. எப்போது பார்த்தாலும் செல்போனிலோ, DSRL கேமிராவிலோ போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கீர்களா? உங்களை ஊக்குவிக்கும் விதத்தில் Rough Guides என்ற Travel guide book சார்பாக AMATUER TRAVEL PHOTOGRAPHY COMPETITION (அமெச்சுர் டிராவல் புகைப்படப் போட்டி) நடத்தப்படவுள்ளது.

இந்தப் போட்டியில் அமெச்சூர் புகைப்படக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய தலைப்பு… 1. பெரும் நகரம், 2. இயற்கை, 3. ஊருக்குள் இருக்கும் யதார்த்தமானவை, 4. மக்கள் வாழ்வில் நெருக்கமானவை.

போட்டியாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளின் கீழ் மட்டுமே புகைப்படங்களை எடுக்க வேண்டும். புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய இணையதள முகவரி competitions@roughguides.com. புகைப்படங்கள் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

போட்டிக்காக அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்களில் சிறந்ததைத் தேர்வு செய்து செப்டம்பர் 16ஆம் தேதி RoughGuides.com இணையதளத்தில் வெளியிடப்படும். அதன், பிறகு செப்டம்பர் 21ஆம் தேதியன்று முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என மூன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பரிசு:

முதற்பரிசு பெறுபவருக்கு ஒரு டிராவல் புகைப்படக்காரருக்குத் தேவையான Survival Kid வழங்கப்படும். அந்த டிராவல் கிட்டில் இடம் பெறும் பொருட்கள்…

• Canon 750D with a Connect and Share Kit

• Aquapac DSLR Submersible case

• Aquapac TrailProof dry bag

• Biox aqua drops

• Biox Aqua tablets

• Sterile medical pack

• Bed bug guard

• Wedge mosquito net (single bed)

• Compact net (double bed)

• Trek Ultra repellent

• Plus a copy of Make the Most of Your Time on Earth, Best Day on Earth and Colour the World.

இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் நபர்களுக்கு "Make the Most of Your Time on Earth", "Best Day on Earth", "Colour the World" போன்ற டிராவல் புத்தகங்களின் பதிப்புகள் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு Rough Guides இணையதளத்தை அணுகவும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic