ஹரியானா சட்டசபையில் நிர்வாணமாக வந்து உரை நிகழ்த்திய ஜெயின் சாமியார் தருண் சாகரை ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரும் பிரபல இசை அமைப்பாளருமான விஷால் தத்லானி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்ததால் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹரியான மாநில சட்டசபையில் அம்மாநில கல்வித்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று ஜெயின் சாமியார் உரை நிகழ்த்தினார். இதில் அவர் முழு நிர்வாணமாக வந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரும், பிரபல இசையமைப்பாளருமான விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சாமியாரின் நிர்வாண கோலத்தை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் மோடி அரசை கடுமையான முறையில் விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை தான் பதிவு செய்ததை நீக்கிவிட்டார்.
ஒரு பக்கம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்து கொண்டு இச்செயலை கண்டிக்கும் விஷால், மறுபக்கம் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயின் சாமியார் தருண்சாகரை புகழ்ந்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருக்கிறார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது "தருண் சாகர் சுவாமிஜியை கடந்த வருடம் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் சொற்பொழிவுகளை எங்கள் குடும்பத்தினர்கள் தொடர்ந்து டிவியில் பார்த்து வருகிறோம். அவரையும் அவரது எண்ணங்களையும் நாங்கள் மதித்து நடக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
தருண் சாகர் பெரும் மதிப்பளிக்க வேண்டிய துறவி என்றும், ஜெயின் சமூகத்தினர் மாத்திரம் அல்ல எல்லா சமூகத்தினருக்கும் அவர் சிறந்த துறவி. அவரை விமர்சிப்பது என்பது துரதிஷ்டவசமானது. அவ்வாறு செய்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தருண் சாகர் பெரும் மதிப்பளிக்க வேண்டிய துறவி என்றும், ஜெயின் சமூகத்தினர் மாத்திரம் அல்ல எல்லா சமூகத்தினருக்கும் அவர் சிறந்த துறவி. அவரை விமர்சிப்பது என்பது துரதிஷ்டவசமானது. அவ்வாறு செய்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் இந்த கருத்திற்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்த விஷால் தன்னுடைய முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தன்னுடைய வார்த்தைகளால் தனது ஜெயின் நண்பர்கள் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இனி அரசியலை விட்டு விலகி தூரமாக செல்லப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விஷாலின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய ஜெயின் சமூக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


No comments:
Write comments