Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

குழந்தைக்கு சாராயம் புகட்டிய கொடூரம்...!


குடி நாட்டுக்கும் வீட்டிற்கு கேடு! என ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் போர்டு வைத்துவிட்டு அதனை அரசே ஏற்று நடத்துவது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் கூத்தாகும். இப்படி வாசகங்கள் அடங்கிய போர்டை வைப்பதின் மூலம் மக்களுக்கு என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியவில்லை.

மதுவின் மோகத்தால் தமிழகம் அகலபாதாலத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த ஓட்டு என்ற ஒற்றை ஆயுதத்தை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அதுவும் அந்த ஆயுதம் தேர்தல் முடிந்தவுடன் கூர்மையை இழந்துவிடுகிறது என்பதே எதார்த்தம். மது என்ற அரக்கணால் தான் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தைகளைகூட அதற்கு பலியாக்க தயாராகிக்கொண்டிருக்கும் குடி வெறியர்கள் தமிழகத்தில் உருவாகிக்கொண்டிருக்கின்றனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயமாகும்.

சென்னையிலுள்ள அம்பத்தூரில் இத்தகை கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தைக்கும் மதுவை கொடுத்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தனலெட்சுமியின் 2 வயது மகன் தானு விளையாடச் சென்ற இடத்தில், குடித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் தானுவுக்கு மதுவை ஊட்டியுள்ளனர். வீட்டுக்குத் திரும்பிய குழந்தையின் உடல்நிலை சரியில்லாததைக் கண்ட தனலெட்சுமி உடனடியாக குழந்தையுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவர்கள் குழந்தையை யாரோ குடிக்க வைத்திருப்பதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த தனலெட்சுமி அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்வம், பழனி என்ற இருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

திருச்சியில் திருமணத்திற்குப் பின் தகாத உறவு கொண்டிருந்த பெண் ஒருவர், தன் காதலனை தனியே சந்திப்பதற்காக தன் குழந்தைக்கு மது கொடுத்து மயக்கமடைய வைத்திருக்கிறார். மறுநாள் குழந்தைகள் மயக்கத்திலிருந்து விழிக்காததால், குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் செய்த காரியம் அம்பலமானது. இதே போல, திருவண்ணாமலையில் குடித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் 3 வயது குழந்தைக்கு மது ஊட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். அண்மையில், சமூக வலைத்தளங்களில் பெற்றோரே தங்கள் 10 மாத குழந்தையைக் குடிக்க வைத்து, அதை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்த கொடுமையும் நடந்துள்ளது.

இவ்வாறு, மதுவினால் கணக்கற்ற சீர்கேடுகளை அடைந்து வரும் தமிழகம் குழந்தைகளுக்கு மது ஊட்டும் புதிய பழக்கத்தினால் சீரழிவின் உச்சத்திற்கே போயிருக்கிறது. குடியால் குட்டிச்சுவராகும் தமிழகத்தை மீட்க முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்களும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசு இவற்றை எல்லாம் கண்டு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பது தான் பெரிய கேள்விக்குறி.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic