Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

குத்துச்சண்டை பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் விகாஷ்


ரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், அமெரிக்க வீரரரான சார்லஸ் கான்வெல்லை எதிர்த்து களம் கண்டார். இந்த போட்டியில் இரு வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் விகாஷ் கிருஷ்ணன் அதிக புள்ளிகள் பெற்றதால் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த வெற்றியை அடுத்து விகாஷ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து வரும் போட்டியில் விகாஷ் கிருஷ்ணன் துருக்கி வீரர் ஒன்டர் சைபாலை எதிர்த்து விளையாட உள்ளார். இந்த வெற்றியை குறித்து விகாஷ் கூறும்போது " நான் இளவயது வீரரை எதிர் கொண்டேன். ஆனாலும் அவர் எதிர்பார்த்தை போல அல்லாமல் நல்ல வலிமை கொண்டவராக இருந்தார். எனக்கு கிடைத்த அனுபவதின் மூலமாகவே இந்த வெற்றியை பெற முடிந்தது. அந்த அமெரிக்க வீரர் இதற்கு முன்பாக விளையாடியதை நான் பார்த்ததே இல்லை. ஆகவே நான் முதல் ஒரு நிமிடம் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என கண்காணித்து அதன் பின்னரே ஆதிக்கம் செலுத்த துவங்கினேன்" என தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic