Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

கூடங்குளம் முதல் அணு உலை இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது


கூடங்குளத்தில் உருவாக்கபட்ட முதலாவது அணு உலை நாட்டுக்கு இன்று அர்பணிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் பல அரசியல் தலைவர்கள் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பங்கெடுக்க உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் உள்ளன. இதில் முதல் அணு உலை நாட்டுக்கு இன்று அர்பணிக்கப்படுகிறது. இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வீடியோ மூலம் ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இது ரஷ்யாவின் மாஸ்கோ, புதுடெல்லி, சென்னை  மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யபப்டுகிறது.

முதலாவது அணு உலையில், இதுவரை 1070 கோடி யூனின் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் உலையில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தி, தமிழகத்திற்கு 562 மெகாவாட், கர்நாடகத்திற்கு 221 மெகாவாட், கேரளாவிற்கு 122 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட், ஆந்திராவுக்கு 50 மெகாவாட் என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தங்கள் ஊரில் இந்த உலை அமைக்கப்பட்டதற்கு கூடங்குளம் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆரம்பம் முதலே பவேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்திருக்கின்றனர். கூடங்குளத்தில் இயங்கும் இந்த அணு உலை நிச்சயம் ஒரு நாள் மனித உயிருக்கு உலை வைக்கும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic