Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

பணம் கொள்ளையடிக்கப்பட்டது காவல்துறையின் மெத்தனப்போக்கா...?



சேலத்திலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு சந்தெகங்கள் எழுந்துள்ளது.

நேற்றைய தினம் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த இரயில் பழைய ரூபாய் நோட்டுகளை சென்னை ரிசர்வ் வங்கியின் கிளைக்கு சேலத்தில் இருக்கும் வங்கிகள் அனுப்பியது. கிழிந்த மற்றும் பழைய நோட்டுகளை மக்களிடமிருந்து திரும்பப்பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது நடைமுறையில் பின்பற்றப்படும் விஷயமாகும். அவ்வாறு சேலத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கியின் கிளைகளும் மக்களிடத்திலிருந்து பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு அதனை மத்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு அனுப்பி நேற்று இரவு அனுப்பி வைத்தது.

கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்களை ஏற்றி வந்த இரயில் சென்னை வந்தடையும்போது அதனை எடுத்துச்செல்வதற்காக வந்த அதிகாரிகள் பணம் இருந்த இரயில் பெட்டியை திறந்த போது அதிர்ச்சியடைந்தனர். அதில் கொண்டு வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பிற்காக 4 போலீஸார் நியமித்திருந்தும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து இரயில் மூலம் பணம் கொண்டு வரப்படுகிறது என்ற தகவல் எவ்வாறு கசிந்தது? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 350 கி.மீ தூரம் கொண்ட பயணத்தில் இரயில் 15 இரயில் நிலையங்களில் நின்றது. பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஓடும் இரயில் யாராலும் இரயில் மேல் கூறையில் ஏறி துளைபோட்டு உள்ளே செல்வதற்கு வாய்பில்லை. ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் இரயில் நின்றபோதுதான் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic