Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 21, 2016

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்குகள் முடக்கம்


ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் 2.35 லட்சம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டுவிட்டர், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களது இயக்கங்களுக்கு ஈர்ப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதையடுத்து, டுவிட்டரில் செயல்படும் ஐ.எஸ். ஆதரவு கணக்குகள் குறித்து பல்வேறு நாடுகளிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வே நடத்தின. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்பில்  உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட 2.35 லட்சம் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

அண்மைக்காலங்களில் டுவிட்டரில் ஏராளமான கணக்குகள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், அதிலும் குறிப்பாக ஐஎஸ் இயக்கத்தினரை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், 2014ல் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ஐஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 46 ஆயிரம் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ரான்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 2014 ஜூலை முதல் 2015 மே வரை 75 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகள் வழியாக ஐஎஸ் ஆதரவு செய்திகளை பரிமாறியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 முறை தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘நாங்கள் பல்வேறு தொழில் நுட்ப உதவிகளை கொண்டு, டுவிட்டரில் பரிமாறிக் கொண்ட கருத்துகளை கண்டறிந்தும், மற்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களை கொண்டும் கணக்குகளை தவறாக பயன்படுத்தியவர்களை தெரிந்து கொண்டோம். அதன்பின்பே, அந்த கணக்குகளை சஸ்பெண்ட் செய்தோம். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள  கணக்குகளை பயன்படுத்தியவர்கள், மீண்டும் டுவிட்டரில் வேறு கணக்குகள் மூலம்  வர வாய்ப்புள்ளது. எனவே, அது குறித்து  முழுமையாக ஆய்வு செய்ய மேலும் சில  குழுக்களை நியமித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.அமெரிக்க  அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டுவிட்டரில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு பரிவர்த்தனைகள் கடந்த 2 ஆண்டுகளில் 45 சதவீதம் சரிவடைந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic