Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

கஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது...!

கல்வீச்சுப் போராட்டம், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் 52 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள கஷ்மீர் மாநிலத்தில்  நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக‌ சீரடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து புல்வாமா நகரில் ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது.

எம்.ஆர்.கஞ்ச், நவெட்டா ஆகிய காவல் நிலைய எல்லைகளில் மட்டும் தற்போது தடையுத்தரவு அமலில் உள்ளது.

“நிலைமை சீரடைந்து வருவதால் தடையுத்தரவு தளர்த்தப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் சில இடங்களில் சிறிய அளவு கல்வீச்சுப் போராட்டம் நடைபெற்றது. எனினும் ஒட்டு மொத்தமாக நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி கடந்த ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படை யினரால் என்கவுன்ட்டர் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, கஷ்மீரில் வன்முறை வெடித்தது. கல்வீச்சுப் போராட்டம், பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குல் போன்ற வற்றால் 66-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic