Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 30, 2016

ஐ. நா வுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன சம்பந்தம்...?


பொதுவாக நடைமுறை வாழ்கையில் ஏதாவது ஒரு விசயத்தில் சம்பந்தமே இல்லாமல் தலையிட்டால் "அம்மாவாசைக்கும் அப்துல்லாவிற்கும் என் சம்பந்தம்?" என்று கேள்வி கேட்பார்கள். காரணம் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத ஒரு நபர் அவ்விசயத்தில் தலையிட்டால் இது பிறருக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தும்

அந்தமாதிரியான சங்கதிதான் இது? இங்கே நாம் கேட்க வேண்டியது ஐ. நாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன சம்பந்தம்? காரணம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நல்லெண்ணத்தூதராக நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த கேள்வி எழுகிறது.

நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுபவர்களின் பணிகள் எல்லாம் பாராட்டக்குரியதே! அதே சமயம் யார் யார் இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எந்த வரைவிலக்கணமும் இல்லையா என்ன? அவ்வாறு தேர்ந்தெடுக்கும் நபர்களுடைய பின்புலம் என்ன? அரசியல், உரிமைகளுக்கான போராட்டம், சட்டம், இப்படி ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கி மக்களுக்காக வீதியில் இறங்கி போராடியவர்களை நியமித்தால் கூட பரவாயில்லை. ஆனால் இவ்வாறான எந்த போராட்டங்களையும் தன் வாழ்க்கையில் சந்திக்காமல், புகழ்பெற்ற சினிமா நடிகரின் மகள் என்ற ஒற்றை அடையாளத்தை கொண்டு ஐ. நாவின் நல்லெண்ணட்தூதராக நியமிக்கப்படுவார்களேயானால் அந்த சேவைக்கான மதிப்பு, அடையாளம் சிதைக்கப்படுவதாகவே இருக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic