இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக இரண்டு தலித் இளைஞர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் அருகேயுள்ள உப்பலாப்புரம் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி ஒரு பசு மாடு இறந்திருக்கிறது. காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவருக்கு சொந்தமான அந்த பசு இறந்த பின், அதை வாங்கிய இரண்டு தலித் சகோதரர்கள் அதன் தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பசு காவலர்கள் அமைப்பினர் அங்கு வந்து பசுத்தோலை உரித்த அவ்விரு இளைஞர்களையும் தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் அங்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவ்விரு இளைஞர்களையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலில் இருவரின் அடையாளம் தெரிந்துள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்காக தலித் இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பசு காவலர்களை குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இருப்பினும் இவ்விவகாரத்தில் தலித்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. மோடியின் பேச்சுக்கு பல இந்து அமைப்புகளே கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments