Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 30, 2016

பதக்கம் வாங்கவில்லை என்றால் கம்பி எண்ண வேண்டியதுதானா..?


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத ஜிம்பாப்வே வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ள அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கிற்கு ஜிம்பாப்வே தரப்பில் மொத்தம் 31 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜிம்பாப்வே வீரர்கள் ஒரு பதக்கத்தை கூட வெல்லவில்லை.

இதனையடுத்து, ஜிம்பாப்வே நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே, ‛ஒலிம்பிக்கில் வெறுமனே தேசியக் கொடியை தாங்கி, அணிவகுப்பில் பங்கேற்கவும், தேசிய கீதம் பாட மட்டுமே அவர்களை அனுப்பவில்லை. பதக்கம் வெல்லாத இந்த எலிகளுக்கு அதிகத் தொகை செலவிழத்திருக்கிறோம்' எனக் கொதித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே வீரர் வீராங்கனைகள் அனைவரையும் கைது செய்ய முகாம்பே உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு இணையதளம் ஒன்று வெளியிட்ட இச்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இச்செய்தியில் உண்மையில்லை என ஜிம்பாப்வே அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது போல் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வடகொரிய வீரர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் வுன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic