Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 26, 2016

மும்பை தர்காவிற்குள் பெண்களை அனுமதிக்க கோர்ட் உத்தரவு!

 
 
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை மாநில அரசை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.

பொது நல வழக்கை தொடர்ந்த நூர்ஜெஹான் நியாஜ் மற்றும் ஜாகியா சோமன் தீர்ப்பு குறித்த கூறுகையில், குரான் அடிப்படையிலும், அரசியல் சாசனம் அடிப்படையிலும் எங்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த 2012 முன் வரை பெண்கள் தர்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர் எனக்கூறினார்கள்.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தர்காவிற்குள் நுழைய பெண்களுக்கு தடை விதிக்க தர்கா நிர்வாகத்திற்கு உரிமையில்லை. தொழுகை நடத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முழு உரிமை உள்ளது. நிர்வாகத்தின் தடை, பாலின சமநிலையை மீறுவதாகும் எனக்கூறியது.

தர்கா நிர்வாகம் சார்பில் வாதிடுகையில், தர்காவிற்குள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு பெண்களுக்கு பாதிப்பில்லை எனக்கூறப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic