சென்னை கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றுகிறார்கள். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

No comments:
Write comments