Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

தென்கொரியா போர் ஒத்திகை - கடுப்பாகிப்போன வடகொரியா


வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து நேற்று முதல் ஒரு வாரத்திற்கு போர் ஒத்திகையை துவக்கினர்.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன குண்டு சோதனையை நடத்தியது. அதைத்தொடர்ந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளின் சோதனைகளையும் நடத்தி வருகிறது. மேலும் தென்கொரியா மீதும் அமெரிக்கா மீதும் அணு ஆயுத போர் தொடுப்போம் என்று அவ்வப்போது வடகொரியா மிரட்டிக்கொண்டிருக்கிறது.

இதன் பின்னனியில் வடகொரியாவின் மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தென்கொரியாவின் பாஜூ பகுதியில் நேற்று போர் ஒத்திகை நடத்தினர். இதில் தென்கொரியா இராணுவத்தைச்சேர்ந்த 75,000 வீரர்களும், அமெரிக்காவைச்சேர்ந்த 25,000 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்தப்போர் பயிற்ச்சி ஒரு வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுப் போர் பயிற்ச்சிக்கும் வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். எங்களின் பாதுகாப்புக்காக போர் ஒத்திகையை நடத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic