Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

முதலுக்கே மோசம் - குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஷர்மிளா


மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, தற்போது தான் இந்திய பிரஜை தான் என்பதை நிருப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறார்.

44 வயது கொண்ட சமூக ஆர்வளரான ஐரோம் ஷர்மிலா அஃப்ஸ்பா சட்டத்தினை ரத்து செய்யக்கோரி கடந்த 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து போராடி வந்தார். இந்த மாதம் தனது போராட்டத்தை நிறைவு செய்த ஷர்மிளா அரசியலில் ஈடுபட்டு மணிப்பூர் மாநில முதலமைச்சராக மாறி தொடர்ந்து போராடப்போவதாக அறிவித்தார். ஆனல் தான் ஒரு இந்திய பிரஜை தான் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு அரசு ஆவணங்களும் அவரிடம் இல்லை. பான் அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ, வங்கி கணக்கோ என எதுவுமே அவரிடம் இல்லை. இதனால் அவரால் தேர்தலில் போட்டியிடமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

தற்போது ஐரோம் ஷர்மிளாவின் நண்பர்கள் பலர் ஒன்றினைது அவர் இந்திய பிரஜை தான் என்பதை நிரூபிப்பதற்காக பல ஆவணங்களையும் திரட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவரது நண்பர் கூறும்போது "அரசியலில் ஈடுபடும்போது பல்வேறு தரப்பிடமிருந்தும் தேர்தல் செலவிற்காக பணம் பெற வேண்டும். அதற்கு கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத ஒருவர் மக்களின் பிரதிநிதியாக ஆவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது" என தெரிவித்தார்.

ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தது பலருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தாலும், அரசியலில் ஈடுபடப்போகிறேன் என அவர் கூறியது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் ஐரோம் ஷர்மிளாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி தான் இதுவரை சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த மருத்துவமனைக்கே சென்றிவிட்டார்.  அடுத்த வருடம் மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic